செய்திகள்

''பத்து தல'' - முக்கிய அப்டேட் கொடுத்த சிம்பு

19th Oct 2022 05:39 PM

ADVERTISEMENT

 

பத்து தல படம் குறித்து புகைப்படத்துடன் கூடிய அப்டேட்டை நடிகர் சிம்பு பகிர்ந்துள்ளார். 

கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெற்றிபெற்ற மஃப்டி திரைப்படம் தமிழில் சிம்பு நடிப்பில் பத்துதல என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுவருகிறது. இந்தப் படத்தை 'சில்லுனு ஒரு காதல்', 'நெடுஞ்சாலை' படங்களை இயக்கிய கிருஷ்ணா இயக்குகிறார். 

கௌதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தை ஸ்டுடியோ கிரீன் சார்பாக ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். 

ADVERTISEMENT

இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்ததாக நடிகர் சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். விரைவில் இந்தப் படத்தின் டீசர் மற்றும் பாடல்களை எதிர்பார்க்கலாம். 

ADVERTISEMENT
ADVERTISEMENT