செய்திகள்

காலங்களில் அவள் வசந்தம் படத்தின் 'பப்பாளி' பாடல்!

19th Oct 2022 08:36 PM

ADVERTISEMENT

 

காலங்களில் அவள் வசந்தம் திரைப்படத்தின் பப்பாளி எனத் தொடங்கும் பாடலின் லிரிக்கல் விடியோ நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. 

அறம் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஶ்ரீ ஸ்டூடியோஸ் தயாரிப்பில் காலங்களில் அவள் வசந்தம் என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. 

இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கத்தில் கலகலப்பான காதல் கதையாக உருவாகியுள்ள திரைப்படம் காலங்களில் அவள் வசந்தம். இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கத்தில் திருமணத்திற்கு பிறகான காதலை அடிப்படையாக வைத்து இத்திரைப்படம் உருவாகியுள்ளது.

ADVERTISEMENT

புதுமுக நடிகர் கௌஷிக் ராம், டாணாக்காரன் புகழ் அஞ்சலி நாயர் கதாநாயகியாக நடித்துள்ளனர். இத்திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. 

இந்நிலையில், இத்திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள பப்பாளி பாடல், யூடியூபில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அறிமுக இசையமைப்பாளர் ஹரி இசையில்,  மோகன் ராஜ் வரிகளில் பப்பாளி பாடல் உருவாகியுள்ளது.

இப்படத்திற்கு கோபி ஜகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். லியோ ஜான் பால் ஒளிப்பதிவு செய்துள்ளார்.  இப்படத்தை தமிழகமெங்கும் வி ஸ்கொயர் எண்டர்டெயின்மெண்ட் வெளியிடுகிறது

ADVERTISEMENT
ADVERTISEMENT