செய்திகள்

முதன்முறையாக தனது மகனின் முகத்தை ரசிகர்களுக்கு காட்டிய காஜல்

19th Oct 2022 05:10 PM

ADVERTISEMENT

 

நடிகை காஜல் அகர்வால் தனது மகனுடன் இருக்கும் படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

நடிகை காஜல் அகர்வால் கடந்த 2020 ஆம் ஆண்டு கௌதம் என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும் கடந்த ஏப்ரல் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு நீல் எனப் பெயரிட்டுள்ளதாக அறிவித்தார். 

இந்த நிலையில் தனக்கு குழந்தை பிறந்து 6 மாதங்கள் நிறைவடைந்த நிலையில் முதன் முறையாக தனது மகனின் முகத்தை காஜல் அகர்வால் ரசிகர்களுக்கு காண்பித்துள்ளார். 

ADVERTISEMENT

காஜல் அகர்வால் தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து இந்தியன் 2 படத்தில் நடித்துவருகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT