நடிகர்கள் ரஜினி, விஜய் வரிசையில் அதிக ரசிகர்களைக் கொண்ட நடிகர் சிவகார்த்திகேயன்தான் என பிரபல தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.
தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் பிரின்ஸ். இந்தத் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 21ஆம் தேதி வெளியாகிறது.
இதையும் படிக்க | பா.ரஞ்சித் படத்துக்காக நீண்ட இடைவேளைக்கு பிறகு விக்ரமுடன் கைகோர்க்கும் பிரபலம்
இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மரியா என்ற உக்ரைன் நாட்டைச் சேர்ந்த நடிகை நடித்துள்ளார். மேலும் நடிகர் சத்யராஜ், பிரேம்ஜி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்நிலையில், கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தயாரிப்பாளருமான அன்புச்செழியன் ‘ரஜினி, விஜய் வரிசையில் அதிக ரசிகர்களைக் கொண்ட நடிகர் சிவகார்த்திகேயன்தான். அவருடைய படத்தை தீபாவளிக்கு வெளியிடுவதில் எங்கள் நிறுவனம் மகிழ்ச்சி அடைகிறது. இந்தப்படம் கண்டிப்பாக ஹிட் அடிக்கும்’ என சிவகார்த்திகேயனை பாராட்டி பேசியுள்ளார்.