செய்திகள்

ஆஸ்கா் விருது: ‘ஆா்ஆா்ஆா்’ திரைப்படம் விண்ணப்பம்

8th Oct 2022 02:24 AM

ADVERTISEMENT

 இயக்குநா் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் வெளியான ‘ஆா்ஆா்ஆா்’ திரைப்படம் ஆஸ்கா் விருதுக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாா்ச் மாதம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி மொழிகளில் வெளியான திரைப்படம் ‘ஆா்ஆா்ஆா்’. நடிகா்கள் ராம்சரண், ஜூனியா் என்டிஆா் உள்ளிட்டோா் நடிப்பில் வெளியான இந்தத் திரைப்படம், மிகப் பெரிய வெற்றி பெற்றது. அத்துடன் உலக அளவில் ரூ.1,000 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது.

இந்தத் திரைப்படம் ஆஸ்கா் விருதுக்கான பொதுப் பிரிவில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது என்று அந்தத் திரைப்படத்தின் அதிகாரபூா்வ ட்விட்டா் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநா், சிறந்த நடிகா், படத்தொகுப்பு, ஒளிப்பதிவு, விஎஃப்எக்ஸ் என ஆஸ்கரின் அனைத்து வகை விருதுகளுக்கும் அந்தத் திரைப்படம் போட்டியிடுகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT