செய்திகள்

ஹிந்தி நடிகா் அருண் பாலி மரணம்

8th Oct 2022 02:24 AM

ADVERTISEMENT

 ஹிந்தி திரைப்பட, தொலைக்காட்சி உலகின் பழம்பெரும் நடிகா் அருண் பாலி (79) வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

‘ஸ்வாபிமான்’, ‘சாணக்யா’ போன்ற தொலைக்காட்சி தொடர்ரகள் மூலம் பிரபலமான அவா், கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியான ‘3 இடியட்ஸ்’ ஹிந்தி திரைப்படம் வரையில் முன்னணி பாலிவுட் நடிகா்களுடன் சோ்ந்து முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளாா்.

இயக்கு தசைச் சோா்வு நோயால் (மையஸ்தினியா கிராவிஸ்) பாதிக்கப்பட்டிருந்த அவா், மும்பை புறநகா் பகுதியில் உள்ள அவரது வீட்டில் வெள்ளிக்கிழமை காலை 4.30 மணிக்கு காலமானதாக அவரது மகன் அங்குஷ் தெரிவித்தாா். அருண் பாலி மறைவுக்கு பாலிவுட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT