செய்திகள்

பிக்பாஸ் 6-ல் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் இவர்களா ?

7th Oct 2022 12:44 PM

ADVERTISEMENT

 

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் துவக்க விழா வருகிற ஞாயிறு (அக்டோபர் 9) ஆம் தேதி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவிருக்கிறது. இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கவிருக்கிறார். 

நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் குறித்து பல்வேறு தகவல்கள் உலா வருகின்றன. இந்த ஆண்டு விஜய் டிவி சார்பாக திவ்ய தர்ஷினி, ரக்ஷன் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.

விஜே ரக்ஷன்
தொகுப்பாளர் திவ்யதர்ஷினி
மகேஷ்வரி
மைனா நந்தினி
ராபர்ட் மாஸ்டர்
ஜி.பி.முத்து
ரச்சிதா மகாலட்சுமி
ஆயிஷா

மேலும் தொகுப்பாளர் மற்றும் சின்னத்திரை நடிகை மகேஷ்வரி, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரர் மணிகண்டன், சத்யா தொடர் புகழ் ஆயிஷா, பாடகி ராஜலட்சுமி, மைனா நந்தினி,  ரச்சிதா மகாலட்சுமி, ராபர்ட் மாஸ்டர், நடிகை ஸ்ரீநிதி, சமூக வலைதளங்கள் மூலம் பிரபலமான ஜி.பி.முத்து, இலங்கையைச் சேர்ந்த தொகுப்பாளர் ஜனனி, நடிகை விசித்ரா போன்றோர் கலந்துகொள்ளவிருப்பதாக கூறப்படுகிறது. 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT