செய்திகள்

குழந்தை பெற்றுக்கொள்ள முடிவெடுத்த நயன்தாரா?

7th Oct 2022 01:19 PM

ADVERTISEMENT

 

நடிகை நயன்தாரா குழந்தை பெற்றுக்கொள்ள முடிவெடுத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. 

மோகன் ராஜா இயக்கத்தில் சிரஞ்சீவி நாயகனாக நடித்துள்ள 'காட் ஃபாதர்' படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது.

லூசிஃபர் பட ரீமேக்கான இந்தப் படத்தில் சல்மான் கான் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க  நயன்தாரா முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். திருமணத்துக்கு பிறகு நயன்தாரா நடித்த இந்தப் படம் வெற்றிபெற்றதில் அவர் மகிழ்ச்சியில் இருக்கிறாராம்.

ADVERTISEMENT

இதையும் படிக்க | பிரபாகரன் வாழ்க்கையை படமாக்கும் வெற்றிமாறன்!

'பிரேமம்' இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன் இயக்கத்தில் 'கோல்டு' மற்றும் 'மாயா' படத்துக்கு பிறகு இயக்குநர் அஸ்வின் சரவணனுடன் கைகோர்த்துள்ள 'கனெக்ட்' போன்ற படங்கள் அடுத்தடுத்து வெளியாகவிருக்கின்றன. தற்போது ஹிந்தியில் அட்லி இயக்கத்தில் ஷாருக்கானுடன் 'ஜவான்' படத்திலும், ஜெயம் ரவியுடன் இணைந்து 'இறைவன்' படத்திலும் நயன்தாரா நடித்துவருகிறார். 

புதிய படங்கள் எதனையும் நயன்தாரா ஒப்புக்கொள்ளாமல் தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து  'தி ரௌடி பிக்சர்ஸ்' சார்பாக படங்களை தயாரிப்பதில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறாராம்.  நயன்தாரா இப்படி முடிவெடுத்ததற்கு காரணம் அவர் குழந்தை பெற்றுக்கொள்ள திட்டமிட்டுள்ளதுதான் காரணம் என்று தகவல் பரவிவருகிறது. 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT