செய்திகள்

அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்ட 'ஹே ராம்' பட நடிகர் மரணம்

7th Oct 2022 11:42 AM

ADVERTISEMENT

 

ஹே ராம் பட புகழ் நடிகர் அருண் பாலியின் மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். 

ஹிந்தி திரையுலகைச் சேர்ந்த பழம்பெரும் நடிகர் அருண் பாலி மைஸ்தீனியா கிராவிஸ் என்ற அரிய வகை தசை சிதைவு நோயின் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (அக்டோபர் 7) காலை 4.30 மணிக்கு மரணமடைந்தார். அவருக்கு வயது 79. 

இதையும் படிக்க  |  ’வணங்கான்’ படப்பிடிப்பு எப்போது?

ADVERTISEMENT

அருண் பாலி 'ஜென்டில்மேன்', 'சத்யா', '3 இடியட்ஸ்', 'ரெடி', 'பர்ஃபி', 'கேதார்நாத்', 'சாம்ராட் பிருத்விராஜ்' போன்ற பல படங்களில் முக்கியமான வேடங்களில் நடித்திருந்தார். 'லால் சிங் சத்தா' படத்தில் ரயிலில் ஆமிர் கானிடம்  கதை கேட்கும் சீக்கியராக அருண் பாலி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

அமிதாப் பச்சன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் சமீபத்தில் வெளியான 'குட் பை' படத்திலும் அருண் பாலி நடித்துள்ளார். 

கமல்ஹாசன் இயக்கி நடித்த 'ஹே ராம்' படத்தில் வங்க தேச முதல்வராக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே அறியப்படும் நடிகராக இருக்கிறார்.  

ADVERTISEMENT
ADVERTISEMENT