செய்திகள்

''அசிங்கம், நான் இந்தியாவுக்கு திரும்ப வர மாட்டேன்'' - இயக்குநர் பகிர்ந்த படத்தால் நடிகை கோபம்

7th Oct 2022 04:05 PM

ADVERTISEMENT


தனது படத்தைப் பகிர்ந்த இயக்குநர் சி.எஸ்.அமுதனுக்கு நடிகை மகிமா நம்பியார் வருத்தமாக பதிலளித்துள்ளார். 

தமிழ் படம், தமிழ் படம் 2 படங்களுக்கு பிறகு இயக்குநர் சி.எஸ்.அமுதன் விஜய் ஆண்டனி நடிப்பில் ரத்தம் படத்தை இயக்கி வருகிறார். இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக மஹிமா நம்பியார் நடிக்கிறார். 

இந்தப் படத்தின் இயக்குநர் சி.எஸ்.அமுதன் தனது ட்விட்டர் பக்கத்தில் மகிமா நம்பியார் தூங்கிக்கொண்டிருக்கும் படத்தைப் பகிர்ந்து, கடினமாக உழைப்பது ரத்தம் படக்குழுவினர் மட்டுமல்ல, நடிகர்களும் கடினமாக உழைக்கின்றனர். நடிகை மகிமாக நம்பியார் தனது வசனங்களைப் படித்துக்கொண்டிருக்கும்போது... என கலாய்த்துள்ளார். 

ADVERTISEMENT

இதையும் படிக்க |  நடிகையை அலுவலகத்தில் வைத்து பூட்டிய ஊழியர் - பரபரப்பு சம்பவம்

அவருக்கு பதிலளித்த நடிகை மகிமா, கடவுளே, அசிங்கம். இந்தப் பதிவுக்கு பிறகு நான் இந்தியாவுக்கு திரும்ப விரும்பவில்லை. இது ஏமாற்றுவேலை என நகைச்சுவையாக தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் ஆண்டனி, அவங்க கடினமா உழைக்கிறத பார்க்கும்போது என்ன பார்க்கிற மாதிரியே இருக்கு என தன் பங்குக்கு கலாய்த்துள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT