செய்திகள்

'ஜென்டில்மேன் 2' படத்தின் கதாநாயகன் யார்? - அதிகாரப்பூர்வ தகவல்

7th Oct 2022 06:02 PM

ADVERTISEMENT

 

ஜென்டில்மேன் 2 படத்தின் கதாநாயகன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். 

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன் நடிப்பில் கடந்த 1993 ஆம் ஆண்டு வெளியான ஜென்டில் மேன் பெரும் வெற்றிப் படமாக அமைந்தது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஜென்டில்மேன் பாடல்கள் இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகின்றன. 

ஜென்டில்மேன் வெளியாகி கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் ஆகும் நிலையில் தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் அறிவிக்கப்பட்டுள்ளது. கோகுல் கிருஷ்ணா இயக்குகிறார். பாகுபலி, ஆர்ஆர்ஆர் போன்ற படங்களின் இசையமைப்பாளர் மரகதமணி (கீரவாணி) இசையமைக்கிறார்.

ADVERTISEMENT

நயன்தாரா சக்கரவர்த்தி, பிரியா லால் ஆகியோர் நாயகிகளாக அறிவிக்கப்பட்டனர். இந்த நிலையில் தற்போது கதாநாயகனாக சேத்தன் சீனு அறிவிக்கப்பட்டுள்ளார். சேத்தன் சீனு சில தெலுங்கு படங்களில் நாயகனாக நடித்துள்ளார். தமிழில் கருங்காலி என்ற படத்தில் அஞ்சலிக்கு ஜோடியாக நடித்துள்ள சேத்தன் சில சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். 

Tags : Gentleman 2
ADVERTISEMENT
ADVERTISEMENT