செய்திகள்

'கணவர் அர்ணவ் அடித்துத் துன்புறுத்துகிறார்' - சீரியல் நடிகை திவ்யாவின் விடியோவால் பரபரப்பு

6th Oct 2022 05:52 PM

ADVERTISEMENT

தனது காதல் கணவர் அர்ணவ் தன்னை அடித்துத் துன்புறுத்துவதாக பிரபல சீரியல் நடிகை திவ்யா வெளியிட்டுள்ள விடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பிரபல சேனலில் ஒளிபரப்பாகி வரும் 'செவ்வந்தி' சீரியலில் கதாநாயகியாக நடித்து வருபவர் கர்நாடகத்தைச் சேர்ந்த நடிகை திவ்யா ஸ்ரீதர். ’கேளடி கண்மணி’ எனும் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான இவர், 'மகராசி' சீரியலில் நடித்திருந்தார். 

 

புதுக்கோட்டையைச் சேர்ந்த நைனா முகமத் என்பவர் 'அர்ணவ்' என்ற பெயரில் தற்போது 'செல்லம்மா' சீரியலில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

ADVERTISEMENT

திவ்யாவுக்கு அர்ணவுடன் கடந்த 2017ல் சீரியலில் நடிக்கும் போது பழக்கம் ஏற்பட்டு லிவ்-இன்னில் வாழ்ந்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்துகொண்டனர். 

இந்நிலையில் கணவர் அர்ணவ் தன்னை துன்புறுத்துவதாக திவ்யா விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

கரோனா காலத்தில் வேலையில்லாமல் இருந்த அர்ணவையும் வீட்டுச் செலவுகளையும் தானே பார்த்துக்கொண்டதாகவும் இருந்தும் அவர் தன்னை துன்புறுத்துவதாகவும்  கூறியுள்ளார். 

படிக்கசின்னத்திரை நடிகர்-கணவர் மீது நடிகை புகார்! கண் முன்னே முத்தம் தருவதாகக் குற்றச்சாட்டு!

ஆனால், அர்ணவ் தரப்பில் இந்த குற்றச்சாட்டு மறுக்கப்பட்டதுடன் அவர் ஆவடி காவல் ஆணையரகத்தில் திவ்யா மீது புகார் கொடுத்துள்ளார். 

தற்போது திவ்யா கர்ப்பமாக இருக்கிறார், மேலும் மருத்துவமனையில் இருந்து அவர் இந்த விடியோவை வெளியிட்டுள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT