செய்திகள்

சின்னத்திரை நடிகர்-கணவர் மீது நடிகை புகார்! கண் முன்னே முத்தம் தருவதாகக் குற்றச்சாட்டு!

6th Oct 2022 11:10 PM

ADVERTISEMENT

 

சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் சின்னத்திரை நடிகர் அர்ணவ் மீது, நடிகை திவ்யா புகார் அளித்துள்ளார். 

தனது முன்னிலையிலேயே அன்ஷித்தா எனும் மற்றொரு நடிகைக்கு தொலைபேசியில் 'ஐ லவ் யூ' எனச் சொல்லி முத்தம் கொடுத்துக் கொண்டதாக கண்ணீர் மல்க குற்றம்சாட்டியுள்ளார்.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் திவ்யா. இவருக்கு கடந்த 2012ம் ஆண்டு ஒருவருடன் திருமணம் முடிந்து ஒரு குழந்தை பிறந்துள்ளது. அதன் பின்னர் விவாகரத்து பெற்று இருக்கிறார்.  கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் ’கேளடி கண்மணி’ நாடகத்தில் கதாநாயகியாக நடித்த போது அதே நாடகத்தில் கதாநாயனாக அர்ணவ் நடித்திருக்கிறார்.

ADVERTISEMENT

அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு பின்னர் நாளடைவில் அது காதலாக மாறி இருவரும் ஒன்றாக ஒரே வீட்டில் வாழ்ந்து வந்துள்ளனர். அதன் பின்னர் திருமணம் செய்து கொள்வது என முடிவு செய்து அர்ணவின் கட்டாயத்தால் ஹிந்துவாக இருந்த திவ்யா,  முஸ்லீம் மதத்திற்கு மாறி இருக்கிறார்.

படிக்க'கணவர் அர்ணவ் அடித்துத் துன்புறுத்துகிறார்' - சீரியல் நடிகை திவ்யாவின் விடியோ

இதன் பின்னர் கடந்த ஜூலை மாதம் ஹிந்து முறைப்படியும், முஸ்லீம் முறைப்படியும் அர்ணவுடன், திவ்யா திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில், திருமணம் செய்து கொண்ட விடியோக்கள் புகைப்படங்கள் எதையும் இணையதளத்தில் சமூக வலைதள பக்கங்களில் பகிர வேண்டாம் என  திவ்யாவை அர்ணவ் கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது. 

இதே நேரத்தில், 'செல்லம்மா' தொடரின் கதாநாயகியாக அன்ஷித்தா என்பவர் உடன், அதே நாடகத்தில் கதாநாயகனாக நடித்து வரும் அர்ணவ், நெருக்கமாக இருந்து வந்ததாக குற்றம் சாட்டியுள்ளார். ஒரு கட்டத்தில் இருவரும் தனி வீடு எடுத்து தங்கியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் பலமுறை போனில் அர்ணவ்  தனது முன்னிலையில் 'ஐ லவ் யூ' கூறிக்கொண்டு அன்ஷித்தாவுக்கு முத்தம் கொடுத்ததாக கூறி கதறி அழுதார் திவ்யா.

இதனால், மனம் உடைந்த திவ்யா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமணமான விடியோக்கள் புகைப்படங்கள் ஆகியவற்றை பகிர்ந்துள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த அர்ணவ் உடனடியாக அந்த விடியோவை எடுக்கச் சொல்லி மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும், அதே நேரத்தில் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது ஒரு விளம்பரத்துக்காக எடுக்கப்பட்ட புகைப்பட விடியோக்கள் எனவும் அர்ணவ் கூறியதால், இதனை பார்த்த திவ்யா அதிர்ச்சி அடைந்திருக்கிறார். தற்போது மூன்று மாத கர்ப்பமாக இருந்து வரும் நிலையில் அது குறித்த விவரங்களையும் வெளியிட வேண்டாம் எனவும் அர்ணவ் கூறியுள்ளார்.

அடுத்த கட்டமாக படப்பிடிப்பு நடக்கும் இடங்களில் அன்ஷித்தாவும் அர்ணவும் ஒன்றாக இருந்ததை பற்றி கேட்டபோது அன்ஷித்தா தண்ணீர் பாட்டிலை தூக்கி தன்னை அடித்ததாகவும் கூறியிருக்கிறார். படப்பிடிப்பு தளத்தில் தன்னுடைய குழந்தை வயிற்றிலேயே செத்துப் போக வேண்டும் எனவும் சாபம் விட்டதாக தெரிவித்துள்ளார்.

அன்ஷித்தா தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டு உச்சமடைந்து போது திடீரென கீழே தள்ளி இருக்கிறார். மேலும் வயிற்றில் எட்டி உதைத்ததில் மயக்கம் அடைந்து வீட்டில் விழுந்திருக்கிறார். அர்ணவுக்கு படப்பிடிப்பு இல்லாத காலகட்டத்தில், தான் (திவ்யா) சம்பாதித்து வீடு பணம் உள்ளிட்டவற்றை வாங்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இறுதியாக தான் அர்ணவுடன் சேர்ந்து வாழ ஆசைப்படுவதாகவும், ஆனால் சேர்ந்து வாழ்வதற்கான அத்தனை வழிகளையும் அர்ணவ் அடைத்து விட்டதாகவும் தெரிவித்திருக்கிறார். தன்னுடைய வாட்ஸ்ஆப், செல்போன், இன்ஸ்டாகிராம் பக்கம் உள்ளிட்ட அனைத்திலும் தன்னை பிளாக் செய்துவிட்டார் என திய்வா குறிப்பிட்டுள்ளார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT