செய்திகள்

’பூங்குழலி’-யின் புதிய படம் இதுதான்.. வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

6th Oct 2022 02:00 PM

ADVERTISEMENT

 

நடிகை  ஐஸ்வர்யா லக்‌ஷ்மியின் புதிய திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

மலையாளத்தில் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை ஐஸ்வர்யா லக்‌ஷ்மி.  அவர் நடிப்பில் வெளியான ‘மாயநதி’, ‘வரதன்’, ‘காணக்காணே’ உள்ளிட்ட மலையாளப் படங்கள் விமர்சன ரீதியாகவும் மிகச்சிறந்த வரவேற்பைப் பெற்றுத்தந்தது. தமிழில் 'ஆக்‌ஷன்’ ‘ஜகமே தந்திரம்’ ‘கார்கி’ படங்களில் தன் நடிப்பாற்றலை வெளிப்படுத்தினார்.

ADVERTISEMENT

குறிப்பாக, பொன்னியின் செல்வனில் ‘பூங்குழலி’ கதாபாத்திரத்தில் நடித்த ஐஸ்வர்யா லக்‌ஷ்மியின் தோற்றமும் நடிப்பும் ரசிகர்களைப் பெருமளவு கவர்ந்தது.

இதையும் படிக்க: கார்த்திக்கு மீண்டும் ஜோடியாகும் ராஷ்மிகா.. எந்தப் படத்துக்கு?

இந்நிலையில், அவர் நடித்து முடித்திருந்த தெலுங்குப் படமான ‘அம்மு’ அமேசான் பிரைம் தளத்தில் வருகிற  அக்.19 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படம் தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT