செய்திகள்

கடல் பார்த்த சொகுசு அபார்ட்மெண்ட் வாங்கிய பிரபல நடிகை: விலை எவ்வளவு தெரியுமா?

6th Oct 2022 11:56 AM

ADVERTISEMENT

 


பிரபல நடிகை மாதுரி தீட்சித், மும்பையில் ரூ. 48 கோடிக்கு அபார்ட்மெண்ட் ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளார்.

மாதுரி தீட்சித் நடித்த மஜா மா படம் அமேசான் பிரைமில் நாளை முதல் வெளியாகிறது. இந்நிலையில் மும்பையில் லோயர் பேரல் பகுதியில் ரூ. 48 கோடிக்குச் சொகுசு அபார்ட்மெண்ட் ஒன்றை வாங்கியுள்ளார் மாதுரி தீட்சித். 53-வது மாடியில் 5,384 சதுர அடி கொண்ட இந்த வீட்டுக்கு ஏழு கார்களை நிறுத்தும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. அரபிக் கடலைப் பார்க்கும் திசையில் உள்ள இந்த அபார்ட்மெண்டில் நீச்சல் குளம், உடற்பயிற்சி நிலையம், கால்பந்து ஆடுகளம் போன்ற பல வசதிகள் உள்ளன. 

 

ADVERTISEMENT

1999-ல் மருத்துவர் ஸ்ரீராமைத் திருமணம் செய்துகொண்ட மாதுரி தீட்சித், அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தார். சில வருடங்களுக்கு முன்பு குடும்பத்துடன் இந்தியாவுக்குத் திரும்பினார். அதன்பிறகு படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொடந்து பங்கேற்று வருகிறார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT