செய்திகள்

‘தமிழ் சினிமாவின் பொற்காலம்’: பொன்னியின் செல்வன் பார்த்த கமல் பேட்டி!

6th Oct 2022 10:26 AM

ADVERTISEMENT

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பார்த்த நடிகர் கமல்ஹாசன் படக்குழுவினரை பாராட்டியுள்ளார்.

எழுத்தாளர் கல்கி எழுதிய புகழ்பெற்ற வரலாற்று நாவலான பொன்னியின் செல்வன் கதையைப் படமாக்கியுள்ளார் இயக்குநர் மணிரத்னம்.

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, சரத் குமார், பிரபு, ஜெயராம், ரஹ்மான், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படத்தின் திரைக்கதையை மணி ரத்னம், ஜெயமோகன், குமரவேல் ஆகியோர் இணைந்து உருவாக்கியுள்ளார்கள். வசனம் - ஜெயமோகன், இசை - ஏ.ஆர். ரஹ்மான், ஒளிப்பதிவாளர் - ரவி வர்மன், கலை - தோட்டா தரணி. பொன்னியின் செல்வன் படம் செப்டம்பர் 30 அன்று வெளியானது.

இதையும் படிக்க | தமிழகத்தில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு: எந்தெந்த மாவட்டங்கள்?

ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்ற இந்தப் படம் முதல் 4 நாள்களில் ரூ. 250 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில், பொன்னியின் செல்வன் திரைப்படத்தை நடிகர்கள் கார்த்தி, விக்ரமுடன் இணைந்து கமல்ஹாசன் நேற்று பார்த்துள்ளார்.

திரைப்படம் முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், படக்குழுவினர் அனைவரைக்கும் பாராட்டுத் தெரிவித்தார். மேலும், தமிழ் சினிமாவின் பொற்காலம் தொடங்கிவிட்டதாகவும் தெரிவித்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT