செய்திகள்

‘விடுதலை’ வெளியீடு குறித்து தகவல்

6th Oct 2022 05:41 PM

ADVERTISEMENT

 

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘விடுதலை’ திரைப்படத்தின் வெளியீடு குறித்து அறிப்பு வெளியாகியுள்ளது.

’அசுரன்’ திரைப்படத்திற்கு பின் இயக்குநர் வெற்றிமாறன் எழுத்தாளர் ஜெயமோகனின் ‘துணைவன்’ சிறுகதையை மையமாக வைத்து ‘விடுதலை’ என்கிற தலைப்பில் புதிய படத்தை இயக்கி வருகிறார்.

ADVERTISEMENT

 

இப்படத்தில் நடிகர் சூரி கதை நாயகனாகவும் விஜய் சேதுபதி முக்கியக் கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்கள். இளையராஜா இசையமைக்கிறார். 

இந்நிலையில், இரண்டு பாகங்களாக வெளியாகும் விடுதலை திரைப்படத்தின் முதல்பாகம் வருகிற நவம்பர் 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிக்க | உங்களால் நான்: கற்றது தமிழ் பற்றி நடிகை அஞ்சலி உருக்கம்

வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT