செய்திகள்

இளைஞர்களைக் கவரும் ‘லவ் டுடே’ டிரைலர்

5th Oct 2022 09:18 PM

ADVERTISEMENT

ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் 'கோமாளி' திரைப்படப் புகழ் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடிக்கும் 'லவ் டுடே' திரைப்படத்தின் டிரைலரை நடிகர் சிலம்பரசன் இன்று வெளியிட்டார்.

கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ், கல்பாத்தி எஸ்.சுரேஷ் ஆகியோர் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் லவ் டுடே. ‘கோமாளி’ புகழ் பிரதீப் ரங்கநாதன் இந்தத் திரைப்படத்தை இயக்கி நடித்துள்ளார்.

இதையும் படிக்க | ஐஸ்வர்யா ராஜேஷின் அடுத்த படம் என்ன தெரியுமா?

பொழுதுபோக்கு திரைப்படமாக தயாராகியுள்ள ‘லவ் டுடே’ திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக 'நாச்சியார்' படத்தில் நடித்த இவானா நடித்துள்ளார். இவர்களுடன் சத்யராஜ், ராதிகா சரத்குமார், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

ADVERTISEMENT

ஏற்கெனவே பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது டிரைலர் வெளியாகியுள்ளது. காதலர்களிடையே ஏற்படும் மோதல் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு பொழுதுபோக்கு அம்சத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் நவம்பர் 4ஆம் தேதியன்று உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT