செய்திகள்

எஸ்.ஜே.சூர்யாவா இது? மிரட்டலான போஸ்டர் வெளியீடு

5th Oct 2022 04:43 PM

ADVERTISEMENT

 

மார்க் ஆண்டனி திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் தோற்றப் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

திரிஷா இல்லனா நயன்தாரா' படம் மூலம் பரபரப்பை ஏற்படுத்தியவர் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன். பின்னர் சிம்பு நடிப்பில் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தை இயக்கினார். சிம்புவின் திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய தோல்விப் படமாக அமைந்தது. சிம்பு சரியாக ஒத்துழைக்காததால்தான் இந்தப் படம் தோல்வியைடந்ததாக அந்தப் படத்தின் தயாரிப்பாளர் குற்றம்சாட்டியது அனைவரும் அறிந்ததே. 

இதையும் படிக்க: வசூலில் தடுமாறும் விக்ரம் வேதா... இதுவரை இவ்வளவுதானா?

ADVERTISEMENT

அதனையடுத்து  தற்போது இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் விஷாலுடன் கைகோர்த்துள்ளார்.

'மார்க் ஆண்டனி' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்துவருகிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். 

இப்படத்தின் விஷால் தோற்றப் போஸ்டர் முன்பு வெளியாகியிருந்த நிலையில், ஜாக்கி பாண்டியன் என்கிற கதாபாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் தோற்றமும் இன்று வெளியாகியுள்ளது. பெரிய மீசை, கையில் துப்பாக்கி என மிரட்டலாக இருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா! 

 
ADVERTISEMENT
ADVERTISEMENT