செய்திகள்

நிருபராக ஆசை! பத்திரிகையாளரால் ஈர்க்கப்பட்ட நடிகை!

5th Oct 2022 05:28 PM

ADVERTISEMENT

 

பத்திரிகையாளராக வேண்டும் என்பதுதான் தனது நீண்டகால விருப்பம் என பாலிவுட் நடிகை ஹீனா கான் மனம் திறந்துள்ளார். 

இதற்கு முன்பு ஐடி துறையில் பணிபுரிந்த அவர், தற்செயலாக பாலிவுட் நடிகையாக மாறிவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

பாலிவுட் நடிகையான ஹினா கான் கடந்த 13 ஆண்டுகளாக பாலிவுட் நடிகையாக மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளார். கடந்த 2009ஆம் ஆண்டு முதல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடரில் முதன்மை பாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றார். 

ADVERTISEMENT

படிக்கஎஸ்.ஜே.சூர்யாவா இது? மிரட்டலான போஸ்டர் வெளியீடு

இந்நிலையில், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தனது நீண்ட கால விருப்பம் குறித்து ஹீனா மனம் திறந்துள்ளார். 

அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, நான் நடிகையாக வேண்டும் என நான் நினைத்ததில்லை. பத்திரிகையாளராக வேண்டும் என்பதே என் நீண்ட நாள் விருப்பம். பத்திரிகையாளர் பர்கா டுட்டால் நான் அதிகம் ஈர்க்கப்பட்டுள்ளேன். அவருடைய செய்தி வழங்கும் தன்மைக்கு நான் மிகப்பெரிய ரசிகை. ஆனால், விதி வேறு திட்டம் வைத்திருந்தது. தில்லியில் நடிப்புத் தேர்வுக்கான ஆடிஷன் நடைபெற்றது. நான் நண்பர்களின் வற்புறுத்தலால் கலந்துகொண்டேன். 

முதல் சுற்றில் தேர்ச்சி அடைந்த என்னை மும்பை அழைத்துச் சென்றனர். அங்கு அனைத்து சுற்றுகளிலும் தேர்ச்சி பெற்றதால் நடிகையாக மாறும் சூழல் நேர்ந்துவிட்டது. முதல் நாள் படப்பிடிப்பு தொடங்கியது. பிறகு பழகிவிட்டது. இப்படிதான் நான் நடிகையாக மாறினேன். ஆனால் பத்திரிகையாளராக வேண்டும் என்பதே எனது கனவு எனக் குறிப்பிட்டார். 

பர்கா டுட் முன்னணி ஆங்கில ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். அதற்காக பல விருதுகளையும் பெற்றுள்ளார். தற்போது அவர் சுயமாக செய்தி நிறுவனம் நடத்தி வருகிறார். 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT