செய்திகள்

விரைவில் திருமணம்... காதலியை அறிமுகப்படுத்திய ஹரிஷ் கல்யாண்!

5th Oct 2022 05:45 PM

ADVERTISEMENT

 

நடிகர் ஹரிஷ் கல்யாண் தன் வருங்கால மனைவியை அறிமுகப்படுத்தியுள்ளார்.

தமிழில் ‘சிந்து சமவெளி’ திரைப்படம் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகர்  ஹரிஷ் கல்யாண். ’பிக்பாஸ்’ நிகழ்ச்சியிலும் கலந்துகொண்ட மக்களின் ஆதரவைப் பெற்றவர்.

அதற்குப் பின் அவர் நடிப்பில் வெளியான ‘பியார் பிரேம காதல்’ 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ ‘ஓ மணப்பெண்ணே’ ‘தாராளபிரபு’ உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்று இவரை மினிமம் கியாரண்டி நாயகனாக  மாற்றியது. 

ADVERTISEMENT

தன் வருங்கால மனைவியுடன் ஹரிஷ் கல்யாண்..

தற்போது, டீசல் படத்தில் நடித்து முடித்து அதன் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார்.

இதையும் படிக்க: நிருபராக ஆசை! பத்திரிகையாளரால் ஈர்க்கப்பட்ட நடிகை!

இந்நிலையில், ஹரிஷ் கல்யாண் தான் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நர்மதா உதயகுமார் என்பவரை நான் திருமணம் செய்ய உள்ளதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன் எனக் குறிப்பிட்டு இருவரும் இணைந்திருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

Tags : Harish Kalyan
ADVERTISEMENT
ADVERTISEMENT