செய்திகள்

ஐஸ்வர்யா ராஜேஷின் அடுத்த படம் என்ன தெரியுமா?

5th Oct 2022 06:11 PM

ADVERTISEMENT

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு புதன்கிழமை வெளியிடப்பட்டது. 

காக்கா முட்டை, ரம்மி, கனா, வடசென்னை உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். வடசென்னை வெற்றிக்குப் பிறகு பல்வேறு திரைப்படங்களில் நடித்துவரும் அவரின் அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

இதையும் படிக்க | விஜய் சேதுபதி படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு

ஃபர்ஹானா எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் திரைப்படத்தை இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்குகிறார். டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இந்தத் திரைப்படத்தில் இயக்குநர் செல்வராகவன், ஜித்தன் ரமேஷ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். 

ADVERTISEMENT

இந்தத் திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT