செய்திகள்

ரஜினியுடனான சந்திப்பு குறித்து ஜெயம் ரவி நெகிழ்ச்சி ! 

4th Oct 2022 09:28 PM

ADVERTISEMENT

எழுத்தாளர் கல்கி எழுதிய புகழ்பெற்ற வரலாற்று நாவலான பொன்னியின் செல்வன் கதையைப் படமாக்கியுள்ளார் இயக்குநர் மணி ரத்னம்.

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, சரத் குமார், பிரபு, ஜெயராம், ரஹ்மான், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படத்தின் திரைக்கதையை மணி ரத்னம், ஜெயமோகன், குமரவேல் ஆகியோர் இணைந்து உருவாக்கியுள்ளார்கள். வசனம் - ஜெயமோகன், இசை - ஏ.ஆர். ரஹ்மான், ஒளிப்பதிவாளர் - ரவி வர்மன், கலை - தோட்டா தரணி. பொன்னியின் செல்வன் படம் செப்டம்பர் 30 அன்று வெளியானது. 

பொன்னியின் செல்வன் படம் முதல் நான்கு நாள்களில் உலகளவில் ரூ. 250 கோடிக்கும் மேலாக வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் ஜெயம் ரவி,  ரஜினிகாந்த் சந்தித்ததைக் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது: 

உங்களுடனான அந்த ஒரு நிமிட உரையாடலை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது. உங்கள் அன்பான வார்த்தைகளுக்கும் குழந்தைத்தனமான உற்சாகத்திற்கும் நன்றி தலைவா. பொன்னியின் செல்வன் திரைப்படத்தையும், எனது நடிப்பையும் விரும்புனீர்கள் என்பதை அறிந்து மிகவும் மகிழச்சியடைந்தேன். உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி ரஜினி சார். 
 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT