செய்திகள்

நடிகர் தனுஷை இயக்கும் அடுத்த இயக்குநர் இவர்தான்...

4th Oct 2022 03:41 PM

ADVERTISEMENT

 

நடிகர் தனுஷை அடுத்ததாக இயக்கும் இயக்குநர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

தனுஷ் நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான திருச்சிற்றம்பலம் நல்ல வெற்றியைப் பதிவு செய்தது. தொடர்ச்சியாக தனுஷின் படங்கள் ஓடிடியில் வெளியாகி வந்த நிலையில், திரையரங்கில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தை அவரது ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். 

 

ADVERTISEMENT

இதனையடுத்து செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள 'நானே வருவேன்' படமும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதையும் படிக்க | ரிஷப் பந்த் பிறந்த நாளுக்கு நடிகை ஊர்வசி என்ன செய்தார் தெரியுமா!

மேலும்,  தனுஷ் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் உருவாகிவரும் வாத்தி படம் இந்த ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதி திரைக்குவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கில் சார் என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை பிரபல தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லுரி இயக்கிவருகிறார்.  ஜி.வி.பிரகாஷ் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். 

இதற்கிடையே கேப்டன் மில்லர் படத்துக்காகவும் தனுஷ் தற்போது தயாராகிவருகிறார். 

இந்நிலையில், கேப்டன் மில்லர் படத்திற்குப் பின் தனுஷ் தெலுங்கில் ‘ஃபிடா’ ‘லவ் ஸ்டோரி’ படங்களை இயக்கிய சேகர் கம்முலா இயக்கத்தில்  தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் புதிய படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT