செய்திகள்

எதிர்பார்த்த வசூலை எட்டியதா ஹிந்தி விக்ரம் வேதா?

3rd Oct 2022 03:55 PM

ADVERTISEMENT

 

ஹிந்தி விக்ரம் வேதா படம் முதல் மூன்று நாள்களில் இந்தியாவில் கிட்டத்தட்ட ரூ. 37 கோடி வசூலித்துள்ளது.

விஜய் சேதுபதி, மாதவன் நடித்த விக்ரம் வேதா படம் 2017-ல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படம் தற்போது ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. தமிழில் படத்தை இயக்கிய புஷ்கர் - காயத்ரி ஹிந்தியிலும் இயக்கியுள்ளார்கள். 

ADVERTISEMENT

ஹிருதிக் ரோஷன், சயிஃப் அலி கான், ராதிகா ஆப்தே போன்றோர் நடித்துள்ளார்கள். செப்டம்பர் 30 அன்று இந்தப் படம் வெளியானது. 

விக்ரம் வேதா படத்தைப் பார்த்தவர்கள் நல்லவிதமாக விமர்சனம் செய்திருந்தாலும் முதல் நாளன்று இந்திய அளவில் எதிர்பார்த்ததை விடவும் குறைவான வசூல் கிடைத்தது. இந்தியாவில் முதல் நாளன்று ரூ. 10.58 கோடி வசூலித்தது.  

விக்ரம் வேதா படத்தை வெளியிட்ட ரிலையன்ஸ் நிறுவனம் முதல் மூன்று நாள்களின் வசூலை வெளியிட்டுள்ளது. 2-வது நாளன்று ரூ. 12.51 கோடி, 3-வது நாளன்று ரூ. 13.85 கோடி என மொத்தமாக முதல் மூன்று நாள்களில் விக்ரம் வேதா படத்துக்கு இந்தியாவில் ரூ. 36.94 கோடி வசூல் கிடைத்துள்ளதாகத் தகவல் வெளியிட்டுள்ளது. பிரபல பாலிவுட் பத்திரிகையாளர் தாரன் ஆதர்ஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், முதல் வார இறுதியில் எதிர்பார்த்த அளவு வசூல் இல்லை. வார நாள்களில் நல்ல வசூல் கிடைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT