செய்திகள்

பொன்னியின் செல்வன் மூன்று நாள் வசூல் எவ்வளவு?: அறிவிப்பு

3rd Oct 2022 01:45 PM

ADVERTISEMENT

 

மணி ரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படம் முதல் மூன்று நாள்களில் உலகளவில் ரூ. 200 கோடி வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்தாளர் கல்கி எழுதிய புகழ்பெற்ற வரலாற்று நாவலான பொன்னியின் செல்வன் கதையைப் படமாக்கியுள்ளார் இயக்குநர் மணி ரத்னம்.

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, சரத் குமார், பிரபு, ஜெயராம், ரஹ்மான், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படத்தின் திரைக்கதையை மணி ரத்னம், ஜெயமோகன், குமரவேல் ஆகியோர் இணைந்து உருவாக்கியுள்ளார்கள். வசனம் - ஜெயமோகன், இசை - ஏ.ஆர். ரஹ்மான், ஒளிப்பதிவாளர் - ரவி வர்மன், கலை - தோட்டா தரணி. பொன்னியின் செல்வன் படம் செப்டம்பர் 30 அன்று வெளியானது. 

ADVERTISEMENT

பொன்னியின் செல்வன் படம் முதல் நாளன்று உலகளவில் ரூ. 80 கோடியை வசூலித்ததாக மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டது. தமிழ்த் திரையுலகில் ஒரு படத்துக்குக் கிடைத்த அதிகபட்ச முதல் நாள் வசூல் என இதுகுறித்த விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் பொன்னியின் செல்வன் படம் முதல் மூன்று நாள்களில் உலகளவில் ரூ. 200 கோடி வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT