செய்திகள்

சந்தோஷ் நாராயணன் இசையில் நானியின் முதல் பாடல் வெளியானது! 

3rd Oct 2022 05:56 PM

ADVERTISEMENT

பிரபல தெலுங்கு நடிகர் நானியின் புதிய படத்திலிருந்து சந்தோஷ் நாராயணன் இசையில் முதல் பாடல் வெளியாகியுள்ளது. 

தெலுங்கில் முன்னணி நடிகராக இருப்பவர் நானி. அவரது முந்தைய படமான ஷியாம் சிங்கா ராய் மற்றும் அடடே சுந்தரா திரைப்படம் அமோக வரவேற்பினைப் பெற்றது.

தற்போது நானி புதிய படத்தில் நடித்து வருகிறார். இதன் முதல் பார்வை போஸ்டரில் நடிகை சில்க் ஸ்மிதாவின் புகைப்படமிருந்தது. அப்போதிலிருந்தே இந்தப் படத்திற்கான ஒவ்வொரு அறிவிப்புகளும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினைப் பெற்றது. இந்தப் படத்திற்கு பெயர் 'தசரா'. இதில் நானியுடன் கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்துள்ளார். இசை - சந்தோஷ் நாராயணன். ஸ்ரீ காந்த் ஒடிலா இயக்கியுள்ளார். ஒளிப்பதிவு மாநகரம், கைதி புகழ் சத்தியன் சூர்யன். சுதாகர் செருகுரி தயாரித்துள்ளார். 

ADVERTISEMENT

தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது கனவு நனவானதற்கு நன்றி தெரிவித்துள்ளார். நடிகர் நானி இந்தப் பாடலைப் பகிர்ந்து, “ஆண்கள் மற்றும் பெண்களே, நடனமாடுபர்கள் மற்றும் மது அருந்துபவர்களே, பாடகர்கள் மற்றும் ரசிகர்களே இதோ கிளாசானா மாஸான தூம் தாம் தோஸ்த்தான் பாடல் இதோ” எனப் பதிவிட்டுள்ளார்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT