செய்திகள்

துல்கர் சல்மானின் புதிய பட அறிவிப்பு!

2nd Oct 2022 01:12 PM

ADVERTISEMENT

 

துல்கர் சல்மானின் சீதா ராமம் வெற்றியை தொடர்ந்து கிங் ஆஃப் கோதா என்ற புதிய படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

துல்கர் சல்மானின் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது சீதா ராமம் திரைப்படம். இந்தப் படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக மிருணாள் தாக்கூர் நடிக்க, ராஷ்மிகா ஒரு முக்கியமான வேடத்தில் நடித்திருந்தார். 5 மொழிகளில் வெளியாகி பெறும் ஆதரவினைப் பெற்றது. 

இதையும் படிக்க: மாலத்தீவில் ஜாலி! அமலா பாலின் குத்தாட்டம்! (விடியோ)

ADVERTISEMENT

தற்போது சீதா ராமம் வெற்றியை தொடர்ந்து கிங் ஆஃப் கோதா என்ற புதிய படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த படத்தினை அபிலாஷ் ஜோஷி இயக்குகிறார். ஜீ ஸ்டூடியோஸ் இந்த படத்தினை தயாரிக்கிறது. 

இந்தப் படமும் மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடா என 5 மொழிகளில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT