செய்திகள்

பொய்கள் பெரிதாக இருந்தாலும் உண்மையை விட சிறியது: அனுபம் கெர்

29th Nov 2022 03:38 PM

ADVERTISEMENT

 

1990-ன் தொடக்கத்தில், ஜம்மு-காஷ்மீரில் பாரம்பரியமாக வாழ்ந்து வந்த பண்டிட் சமூகத்தினா் மீது பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் திட்டமிட்டு தாக்குதல் நடத்தி, அவா்களை அங்கிருந்து விரட்டியடித்தனா். இந்தச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட படமாக - தி காஷ்மீா் ஃபைல்ஸ் எடுக்கப்பட்டது. அனுபம் கொ், தா்ஷன் குமாா், மிதுன் சக்கரவா்த்தி, பல்லவி ஜோஷி உள்ளிட்டோா் நடித்துள்ள இந்தப் படம், கடந்த மாா்ச் 11-ம் தேதி வெளியானது. இயக்கம் - விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி. இப்படத்திற்கு பாரதிய ஜனதாக் கட்சி வரி விலக்கு அளித்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் காஷ்மீர் ஃபைல்ஸ் படத்திற்கு விமர்சததிற்கு நடிகர் அனுபம் கெர் கண்டனம் தெரிவித்துள்ளார். 

நவம்பர் 28ஆம் நாள் இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் இறுது நாளில் தேர்வுக்குழு தலைவர் நடாவ் லபிட் என்பவர், “தொ காஷ்மீர் ஃபைல்ஸ் படம் வெறுப்பை விதைக்கும் மோசமான படம். இந்த மதிப்புமிக்க திரைப்பட விழாவில் இந்த படத்தினை பார்க்கும்போது அதிர்ச்சியாக இருந்தது” என தெரிவித்தார். 

ADVERTISEMENT

இந்த கூற்று சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து சர்ச்சையாகவும் மாறியது. இந்த படத்தில் நடித்த அனுபம் கெர் இதுக்குறித்து கூறியதாவது: 

இனப்படுகொலை சரியென்றால் காஷ்மீரி பண்டிதர்களின் வெளியேற்றமும் சரிதான். இது முன்கூட்டியே திட்டமிடப்பட்டதாகத் தெரிகிறது, ஏனெனில் அதன் பிறகு உடனடியாக டூல்-கிட் கும்பல் செயல்பட்டது. இனப்படுகொலையால் பாதிக்கப்பட்ட யூதர்களின் சமூகத்தில் இருந்து வந்த அவர் இப்படி ஒரு அறிக்கையை வெளியிடுவது வெட்கக்கேடானது. 

பொய்கள் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் உண்மையை விட மிகச்சிரியதே. 

ADVERTISEMENT
ADVERTISEMENT