செய்திகள்

ஜெய் பீம்-2 நிச்சயம்: தயாரிப்பாளர் உறுதி! 

29th Nov 2022 06:00 PM

ADVERTISEMENT

சூர்யா தயாரிப்பில் கடந்த வருடம் வெளியான ஜெய் பீம் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகுமென தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். 

2டி தயாரிப்பில் த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், பிரகாஷ் ராஜ் போன்றோர் நடித்த ஜெய் பீம் படம் கடந்த வருடம் ஓடிடியில் வெளியாகி பலத்த பாராட்டைப் பெற்றது. 

இந்தப் படத்தின் காட்சிகள் ஆஸ்கர் யூடியூப் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. ஆஸ்கர் யூடியூப் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட முதல் தமிழ் படம் என்ற பெருமையைும் ஜெய் பீம் திரைப்படம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

பல்வேறு சர்வதேசப் பட விழாவில் ஜெய் பீம் படம் விருதுகளை வென்றது. தற்போது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துக் கொண்ட படத்தின் தயாரிப்பாளர் கே. ராஜசேகர்,“நிச்சயமாக ஜெய் பீம் 2 எடுக்கப்படும். சந்துரு இது மாதிரி பல வழக்குகளை சந்தித்துள்ளார்” என கூறினார். இதன் மூலம் ஜெய் பீம் 2 படம் எடுக்கப்படுவது உறுதியாகியுள்ளது. 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT