செய்திகள்

மீண்டும் தெலுங்கு பாடல் பாடிய சிம்பு! 

29th Nov 2022 07:11 PM

ADVERTISEMENT

பிரபல தெலுங்கு இயக்குநர் சுகுமார் எழுதி பல்னட்டி சூர்ய பிரதாப் இயக்கும் திரைப்படம் 18 பேஜஸ் (18 pages). இந்தப் படத்தில் நிகில் சித்தார்த், அனுபமா பரமேஸ்வரன் நடிக்கின்றனர். நிகில் சித்தார்த் சமீபத்தில் வெளியான கார்த்திகேயா 2 படம் நல்ல வசூலை பெற்றது குறிப்பிடத்தக்கது. 

கிஏ2 பிக்சர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு இசை- கோபி சுந்தர். ஒளிப்பதிவு- ஏ. வசந்த். 

நடிகர் சிலம்பரசன் பல்வேறு படங்களில் பல்வேறு மொழிகளில் பாடல் பாடியுள்ளார். சமீபத்தில் அவர் பாடிய புல்லட் பாடல் நல்ல வரவேற்பு பெற்றதை தொடர்ந்து தற்போது மற்றொருமொரு தெலுங்கு பாடல் பாடியுள்ளார். ‘டைம் இவ்வா பிள்ளா’ (நேரம் தரமாட்டியா பெண்ணே) பாடலை பாடியுள்ளார். இந்தப் பாடலின் முன்னோட்ட காட்சிகள் வெளியாகியுள்ளது. 

முழுமையான பாடல் டிசம்.5 ஆம் தேதி வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது. இந்தப் படம் வரும் டிச.23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 
 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT