செய்திகள்

கட்டா குஸ்தி படத்தின் ‘சண்ட வீராச்சி’ பாடல் வெளியானது!

29th Nov 2022 06:29 PM

ADVERTISEMENT

விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் உருவாகியுள்ள கட்டா குஸ்தி திரைப்படத்தின் ‘சண்ட வீராச்சி’ லிரிக்கல் விடியோ வெளியாகியுள்ளது. 

ராட்சசன், எஃப்ஐஆர் திரைப்படங்களுக்குப் பிறகு நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கட்டா குஸ்தி. இதில் அவருக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிக்கிறார். இவர்களுடன் நடிகர்கள் காளி வெங்கட், முனிஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கியுள்ள இந்தத் திரைப்படத்தை ரவி தேஜா, விஷ்ணு விஷால் இணைந்து தயாரித்துள்ளனர். இந்தத் திரைப்படம் டிசம்பர் 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக வெளியான சல் சக்கா பாடல் 10 லட்சம் பார்வைகளை கடந்த நிலையில் தற்போது ‘சண்ட வீராச்சி’ பாடல் வெளியாகியுள்ளது. விவேக் இந்தப் பாடலை எழுதியுள்ளார். கர்ணன் படத்தின் மூலம் பிரபலமான பாடகி கிடாக்குழி மாரியம்மாள் இந்தப் பாடலை பாடியுள்ளார். ஜஸ்டின் பிராபகர் இசையமைத்துள்ளார். 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT