செய்திகள்

ஜீ தமிழ் சீரியலில் அறிமுகமான பிக்பாஸ் ஜூலி!

29th Nov 2022 05:41 PM

ADVERTISEMENT

 

சின்னத்திரையில் பிக்பாஸ் மூலம் பிரபலமான நடிகை ஜூலி தற்போது சின்னத் திரை தொடர்களில் களமிறங்கியுள்ளார். 

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடரில், ஜூலி சிறப்பு கதாபாத்திரத்தில் நடிக்கத் தொடங்கியுள்ளார். 

ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது பலரின் கவனத்தையும் ஈர்த்த ஜூலி, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் விளைவாக பிரபலமானார். 

ADVERTISEMENT

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு சில திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களை ஏற்று ஜூலி நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். 

படிக்க மனைவியுடன் 'பாரதி கண்ணம்மா' நடிகர் பகிர்ந்த படம்!

கடந்த சில நாள்களாக எந்தவொரு நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளாமல் இருந்த ஜூலி தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கன்னத்தில் முத்தமிட்டால் தொடரில் நடிக்கத் தொடங்கியுள்ளார். 

ஜீ தமிழில் பிற்பகல் 2 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்தத் தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தத் தொடரில் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 

அவர் நடிப்பில் உருவான எபிஸோடுகள் இந்த வாரம் ஒளிபரப்பாகி வருகிறது. இதனால், ஜூலி ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT