செய்திகள்

மூன்று மொழிகளில் வெளியாகும் ‘வாரிசு’ திரைப்படம்!

28th Nov 2022 02:53 PM

ADVERTISEMENT

பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் 'வாரிசு' என்கிற படத்தில் நடித்து வருகிறார் விஜய். ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கிறார்.

இப்படத்துக்கு இசை - தமன். தமிழில் படமாக்கப்பட்டு தெலுங்கில் டப் செய்யப்பட உள்ள இந்த படம் 2023 பொங்கல் தினத்தன்று ரிலீஸ் ஆகவுள்ளது என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. 

முதல் பாடலான ‘ரஞ்சிதமே’ பாடல் யூடியூபில் 60 மில்லியன் பார்வையாளர்களை சமீபத்தில் கடந்துள்ளதுள்ளதும் படத்தின் எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது. 

இந்நிலையில் தற்போது வாரிசு படம் ஹிந்தியிலும் வெளியாக உள்ளது என தயாரிப்பாளர் தில் ராஜூ தெரிவித்துள்ளார். மேலும் படத்தினை பொங்கலுக்கு / சங்கராத்திரிக்கு ரிலீஸ் செய்வேன் என முதலில் தெரிவித்தது நாங்களே எனவுன் கூறியுள்ளார். நேரடியாக ஹிந்தியில் வெளியாகும் 3வது விஜய் படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் மாஸ்டர், பீஸ்ட் போன்ற படங்கள் ரீலிஸ் ஆனது. 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT