செய்திகள்

இவருக்கு இவ்வளவு சம்பளமா? அதிர்ச்சியில் பிக்பாஸ் ரசிகர்கள்

28th Nov 2022 01:04 PM

ADVERTISEMENT

பிக் பாஸ் போட்டியாளரான ராபர்ட் மாஸ்டர் பெற்ற சம்பளம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 6 போட்டி கடந்த அக்டோபர் 9ஆம் தேதி தொடங்கியது. இந்த சீசனில் ராபர்ட் மாஸ்டர், ரச்சிதா, விக்ரமன், ஆயிஷா, அமுதவாணன், பாடகர் ஏடிகே, மைனா நந்தினி, ஜனனி, அஷீம், செரினா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்நிலையில், இந்த சீசன் தொடங்கியதில் இருந்தே ரசிகர்களின் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானவர் ராபர்ட் மாஸ்டர்.

‘வீட்டில் எந்த பிரச்னையிலும் தலையிட மாட்டார்’, ‘எதிலும் கருத்து தெரிவிக்க மாட்டார்’, ‘ரச்சிதாவை தொந்தரவு செய்கிறார்’ என பல்வேறு விமர்சனங்களை கடந்த 7 வாரங்களாக சந்தித்தவர் ராபர்ட் மாஸ்டர்.

ADVERTISEMENT

இதையும் படிக்க | பாபா மறுவெளியீடு: டப்பிங் பணிகளை முடித்தார் ரஜினி!

இறுதியாக நேற்று பிக் பாஸ் வீட்டிலிருந்து குறைவான வாக்குகள் பெற்றவர் என்ற அடிப்படையில் வெளியேற்றப்பட்டுள்ளார்.

நேற்றைய கமல் நிகழ்விலும், ராபர்ட் மாஸ்டர், குயின்ஸி, ரச்சிதா ஆகியோர் குரூப்பாக செயல்படுவதாகவும், அது பிறரை பாதிப்பதாகவும் போட்டியாளர்கள் குற்றம்சாட்டியதுடன், இந்த வீட்டில் வெறும் பார்வையாளராக மட்டுமே இவர்கள் இருக்கிறார்கள் என்று கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய ராபர்ட் மாஸ்டர் பெற்ற சம்பளம் குறித்து தகவல் இணையத்தில் பேசு பொருளாகியுள்ளது. ஒரு வாரத்திற்கு இரண்டு லட்சம் என மொத்தம் 7 வாரங்களுக்கு ரூ. 14 லட்சம் வரை ராபர்ட் மாஸ்டர் வாங்கியிருக்க கூடும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து பிக் பாஸ் ரசிகர்கள் இணையத்தில் தங்களின் விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT