செய்திகள்

பாபா மறுவெளியீடு: டப்பிங் பணிகளை முடித்தார் ரஜினி!

DIN

சூப்பர் ஸ்டாரின் ‘பாபா’ திரைப்படம் புதுப்பொலிவுடன் மீண்டும் திரையில் வெளியாகவுள்ள நிலையில், அதற்கான டப்பிங் பணிகளை ரஜினிகாந்த் நிறைவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2002ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில், அவரே கதை, திரைக்கதை எழுதி தயாரித்து வெளியிட்ட படம் பாபா. இந்த படத்தை அண்ணாமலை, வீரா, பாட்ஷா படத்தை தொடர்ந்து நான்பாவது முறையாக சுரேஷ் கிருஷ்ணா இயக்கினார்.

ரஜினிக்கு ஜோடியாக மனிஷா கொய்ராலாவும், முக்கிய வேடங்களில் ரியாஸ் கான், கவுண்டமணி, தில்லி கணேஷ், சுஜாதாம் நம்பியார், கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.

பாபா படம் திரைக்கு வந்து 20 ஆண்டுகளான நிலையில், மீண்டும் புதுப்பொழிவுடன் திரையில் வெளியாக தயாராகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மறு படத்தொகுப்பு செய்யப்பட்டு, நவீன தொழில்நுட்பத்திற்கேற்ப கலர் கிரேடிங் செய்யப்பட்டு படத்தை மேம்படுத்தியுள்ளனர்.

இதற்கிடையே, படத்தில் சில காட்சிகளுக்கு மீண்டும் டப்பிங் வாய்ஸ் கொடுத்துள்ளார் ரஜினி. டப்பிங் செய்யும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

மேலும், படத்தில் வரும் பிரபல பாடல்களான மாயா மாயா, கிச்சு கிச்சு, சக்தி கொடு ஆகிய பாடல்கள் டால்பி மிக்ஸ் தொழில்நுட்பத்தில் ஏ.ஆர்.ரகுமான் மாற்றியுள்ளார்.

இந்த படம், ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12ஆம் தேதி வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகின்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT