செய்திகள்

அஜித்தின் துணிவு படத்தில் பாடல் பாடிய நடிகை மஞ்சு வாரியர் 

26th Nov 2022 07:44 PM

ADVERTISEMENT

‘துணிவு' படத்தில் பாடல் பாடியுள்ளதாக நடிகை மஞ்சு வாரியர் தெரிவித்துள்ளார். 

நடிகர் அஜித் குமார் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாவுள்ள திரைப்படம் துணிவு. இந்தப் படத்தில் மஞ்சு வாரியர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். படத்தை இயக்குநர் வினோத் இயக்க, ஜிப்ரான் இசையமைத்துள்ளார். போனி கபூர் தயாரித்துள்ளார். 

இப்படம் 1987 ஆம் ஆண்டு பஞ்சாபில் நடைபெற்ற வங்கிக் கொள்ளையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்து தற்போது டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

இதையும் படிக்க- வடிவேலு குரலில் வெளியானது ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ 2ஆவது பாடல்

ADVERTISEMENT

இந்த நிலையில் ‘துணிவு' படத்தில் பாடல் பாடியுள்ளதாக நடிகை மஞ்சு வாரியர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், அஜித்தின் துணிவு படத்தில் சுவாரஸ்யமான இந்த பாடலில் நானும் பாடியிருப்பது மகிழ்ச்சி என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT