செய்திகள்

எழுத்தாளர், நடிகர் வேல.ராமமூர்த்தி பெயரில் பணமோசடி

25th Nov 2022 11:38 AM

ADVERTISEMENT

 

எழுத்தாளரும் பிரபல நடிகருமான வேல.ராமமூர்த்தி பெயரில் பணமோசடி நடைபெற்றுள்ளது.

‘குற்றப் பரம்பரை’ நாவல் மூலம் பிரபலமானவர் எழுத்தாளர் வேல.ராமமூர்த்தி. அதன்பின், சில திரைப்படங்களுக்கு வசனம் எழுத்தினார். 

தற்போது, முழுநேர நடிகராக அசத்தி  வருகிறார். ‘கிடாரி’ படத்தில் இவரின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.

ADVERTISEMENT

இந்நிலையில், அவர் தன் சமூக வலைதள பக்கத்தில் ‘என் பெயரில் கணக்கு தொடங்கி சிலர் பணத்தை பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் தளங்களிலிருந்து என் பெயரில் நட்பு அழைப்பு வந்தால் யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டாம்’ எனத் தெரிவித்துள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT