செய்திகள்

சமந்தாவின் ‘யசோதா’: 10 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? 

21st Nov 2022 09:29 PM

ADVERTISEMENT

சமந்தாவின் நடிப்பில் வெளியாகியுள்ள ‘யசோதா’ படத்தின் 10 நாள் வசூல் விவரத்தினை படக்குழு அறிவித்துள்ளது.

ஹரி - ஹரீஷ் இயக்கத்தில் நடிகை சமந்தா நடித்துள்ள திரைப்படம் யசோதா. 5 மொழிகளில் தயாரான இந்தத் திரைப்படத்தில் நடிகை சமந்தாவுடன் வரலட்சுமி சரத்குமார், சம்பத் ராஜ், மதுரிமா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

யசோதா படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பினைப் பெற்றது. இப்படம்,  நவம்பர் 11ஆம் தேதி திரையரங்குகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியாகியது. படத்திற்கான தணிக்கை சான்றிதழ் யு/ஏ கிடைத்துள்ளது. ஹாலிவுட் சண்டை பயிற்சியாளருடன் பயிற்சி எடுத்த விடியோக்களும் வைரலானது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிக்க: நயன்தாரா- பிருத்விராஜ் நடிக்கும் ‘கோல்டு’: ரிலீஸ் பற்றிய அதிகாரபூர்வ தகவல்! 

ADVERTISEMENT

படம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளதால் தியேட்டர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் யசோதா திரைப்படம் முதல்நாளில் 6.32 கோடி வசூலித்தது. 

தற்போது 10 நாளில் உலகம் முழுவதும் ரூ.32 கோடிக்கும் அதிகமாக வசூலானதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT