செய்திகள்

'நீ முழுமையடைந்துவிட்டாய்; இப்போதும் எப்போதும் லவ் யூ தங்கமே!' - விக்னேஷ் சிவன் பதிவு

18th Nov 2022 02:35 PM

ADVERTISEMENT

இப்போதும் எப்போதும் 'லவ் யூ தங்கமே'! - விக்னேஷ் சிவன் பதிவு!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் பிறந்தநாளையொட்டி அவரது கணவரும் இயக்குநருமான விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராமில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். 

இதுகுறித்த அவரது பதிவில், 'உன்னுடன் இது 9 ஆவது பிறந்தநாள். ஒவ்வொரு பிறந்தநாளும் ஸ்பெஷல், மறக்கமுடியாது. ஆனால், அது எல்லாவற்றையும்விட இந்த ஆண்டு கணவன் - மனைவியாக இன்னும் ஸ்பெஷல். பெற்றோராக அழகான இரண்டு குழந்தைகள்.

நான் உன்னை ஒரு தைரியமான பெண்ணாகத்தான் எப்போதும் அறிந்திருக்கிறேன். நீ எதைச் செய்தாலும் நம்பிக்கையுடனும் அர்ப்பணிப்புடனும் செய்வாய்.  இத்தனை வருடங்களில் நான் ஒரு வித்தியாசமான நபரைப் பார்த்திருக்கிறேன். உன்னுடைய நேர்மையால் எப்போதும் ஈர்க்கப்பட்டுக் கொண்டிருக்கிறேன். 

ADVERTISEMENT

ஆனால் இன்று! 

உன்னை குழந்தைகளின் அம்மாவாகப் பார்க்கிறேன். நீ முழுமையடைந்ததைப் பார்க்கிறேன். நீ இன்று மகிழ்ச்சியாக இருக்கிறாய். இன்னும் அழகாகத் தெரிகிறாய்!

குழந்தைகள் முத்தம் கொடுக்கும் என்பதால் நீ மேக்அப் கூட போடுவதில்லை. ஆனால், இத்தனை வருடங்களில் இப்படி ஒரு அழகை நான் பார்த்ததில்லை. 

உன் முகத்தில் இருக்கும் புன்னகையும் மகிழ்ச்சியும் எப்போதும் இருக்க வேண்டும், அதற்காக வேண்டிக்கொள்கிறேன். 

நான் இப்போது செட்டில் ஆகிவிட்டதாக உணர்கிறேன்! 

இதையும் படிக்க | நயன்தாரா 'ஹீரோ'வான முதல் படம்!

வாழ்க்கை அழகாக இருக்கிறது... திருப்தியாகவும் நன்றி நிறைந்து இருக்கிறது!

குழந்தைகளுடன் நம்முடைய பிறந்தநாளெல்லாம் இதுபோல் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுகிறேன்!

நாம் அனைவரும் ஒன்றாக வளர்கிறோம்! எதிர்த்துப் போராட கற்றுக்கொள்கிறோம், அதேநேரம் சண்டையிட்டு மகிழ்கிறோம்.

கடவுளின் ஆசீர்வாதத்துடனும் பிரபஞ்சத்தின் சாட்சியத்துடனும் நமக்கு ஒரு அற்புதமான வாழ்க்கையை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.

இப்போதும் எப்போதும் லவ் யூ தங்கமே! என்று பதிவிட்டு நயன்தாராவுடனான புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார். 

இதையும் படிக்க | சர்ச்சைகளை ஊதித் தள்ளிய ‘லேடி சூப்பர் ஸ்டார்’

ADVERTISEMENT
ADVERTISEMENT