செய்திகள்

'கல்யாணமா..’? திருமணம் குறித்து விளக்கமளித்த தமன்னா!

18th Nov 2022 04:51 PM

ADVERTISEMENT

 

 திருமணம் குறித்த வதந்திகளுக்கு விளக்கமளித்துள்ளார் நடிகை தமன்னா.

தமிழில் கேடி படத்தின் மூலம் அறிமுகமான தமன்னா, தனுஷுடன் படிக்காதவன், கார்த்தியுடன் பையா, சிறுத்தை, சூர்யாவுடன் அயன், விஜய்யுடன் சுறா, அஜித்துடன் வீரம் உள்ளிட்ட வரிசையான ஹிட் படங்களில் நடித்து பிரபலமானார்.

தொடர்ந்து, தெலுங்கு, ஹிந்தி என வரிசையாக பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பெரும் ரசிகர் கூட்டத்தையே உருவாக்கி வைத்துள்ளார்.

ADVERTISEMENT

எல்லா நடிகைகளை போலவே, இவரையும் அடிக்கடி திருமண கிசுகிசுவில் ரசிகர்கள் சிக்க வைப்பது வழக்கம். அப்படி போலியான செய்திகள் பரவும் போதெல்லாம் அதை மறுத்து தமன்னா கருத்து தெரிவித்து வந்தார்.

இதையும் படிக்க | இதுதான் திட்டம் ‘விஜய் - லோகேஷ் கனகராஜ்’ கூட்டணி குறித்து தகவல்

தற்போது மீண்டும் தமன்னாவுக்கு விரைவில் திருமணம் என்று தகவல்கள் பரவி வரும் நிலையில், அது முற்றிலும் வதந்தி என தமன்னா இன்ஸ்டாகிராமில் விளக்கமளித்துள்ளார்.

 

Tags : Tamannah
ADVERTISEMENT
ADVERTISEMENT