செய்திகள்

'பிரேமம்' அல்போன்ஸ் இயக்கத்தில் பிருத்விராஜ் - நயன்தாராவின் ‘கோல்டு’: ரிலீஸ் எப்போது? 

15th Nov 2022 04:32 PM

ADVERTISEMENT

'நேரம்' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்ரன். அவர் இயக்கிய மலையாள படமான 'பிரேமம்' தமிழகத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்கு பிறகு அல்போன்ஸ் தனது அடுத்த படத்தை இயக்கி வருகிறார். 

'கோல்டு' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் பிருத்விராஜ், நயன்தாரா முதன்மை வேடத்தில் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்தப் படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பினைப் பெற்றது. 

இதையும் படிக்க ஐஸ்வர்யா ராயின் ‘விடை கொடு சாமி விட்டுப் போகின்றேன்...’ பாடல் திடீரென வைரலாக காரணம் என்ன?

இந்தப் படத்தை பிருத்விராஜின் பிருத்விராஜ் புரொடக்சன்ஸ் மற்றும் மேஜிக் ஃபிரேம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. ராஜேஷ் முருகேசன் இந்தப் படத்துக்கு இசையமைக்க, ஆனந்த் சி சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

ADVERTISEMENT

இந்தப் படத்திற்கு திரைக்கதை இயக்கமட்டுல்லாமல் எடிட்டிங், அனிமேஷனும் இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன் செய்யவிருப்பது குறிப்பிடத்தக்கது. அவரது முகநூல் பக்கத்தில் அடிக்கடி ரசிகர்கள் கேள்விக்கு பதிலளிப்பார். இதில் படத்தின் தமாதத்திற்கு காரணமாக சாப்பட்டை பக்குவப்படுத்த நேரமெடுக்கிறது. பொறுத்துக் கொள்ளுங்கள். நன்றாக வந்துக் கொண்டு இருக்கிறது என பதிலளிப்பார். 

இந்நிலையில் படம் வரும் டிசம்பர் மாதம் 2ஆம் நாள் தமிழ் மற்றும் மலையாளத்தில் ரிலீஸாகுமென தகவல் வெளியாகியுள்ளது. அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளியாகுமென சொல்லப்படுகிறது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT