செய்திகள்

ஹிந்தியில் ரூ. 75 கோடி வசூலித்த காந்தாரா படம்!

15th Nov 2022 01:36 PM

ADVERTISEMENT

 

கன்னடப் படமான காந்தாராவின் ஹிந்திப் பதிப்பு இதுவரை ரூ. 75 கோடி வசூலித்து அசத்தியுள்ளது.

கேஜிஎஃப் படத்தைத் தயாரித்த ஹோம்பாலே நிறுவனம் அடுத்ததாகத் தயாரித்து வெளியிட்ட காந்தாரா என்கிற கன்னடப் படம் இந்திய அளவில் கவனம் பெற்று அதிக வசூலைப் பெற்றுள்ளது. ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கிய இந்தப் படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியாகி ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளது.

ஹிந்தியில் டப் செய்யப்பட்டு வெளியான காந்தாரா படம் இதுவரை ரூ. 75 கோடி வசூலித்து அசத்தியுள்ளது. ஒட்டுமொத்தமாக ரூ. 76 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதால் ரூ. 100 கோடி வசூலை விரைவில் எட்டுமா என்கிற ஆவல் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது. ஹிந்தி காந்தாரா படம் முதல் வாரத்தில் ரு. 15 கோடியும் 2-வது வாரத்தில் ரூ. 16.70 கோடியும் 3-வது வாரத்தில் கிட்டத்தட்ட ரூ. 20 கோடியும் 4-வது வாரத்தில் ரூ. 18.10 கோடியும் வசூலித்துள்ளது. 5-வது வாரத்திலும் இதன் வசூல் சீராக உள்ளது. 

ADVERTISEMENT

ஹிந்தியில் வெளியான மாற்று மொழிப் படங்களில் பாகுபலி 2, கேஜிஎஃப் 2, ஆர்ஆர்ஆர், 2.O, பாகுபலி, புஷ்பா ஆகிய படங்களுக்கு அடுத்ததாக அதிகமாக வசூலித்த படம் என்கிற சாதனையைப் படைத்துள்ளது. 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT