நடிகர் விமல் நடிப்பில் வெளியான களவாணி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குநர் சற்குணம். மேலும், களவாணி 2, டோரா, வாகை சூட வா, நய்யாண்டி, சண்டிவீரன் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். இவரின் வாகை சூட வா படத்திற்கு தேசிய விருது கிடைத்தது.
இந்நிலையில், நடிகர் அதர்வாவை வைத்து ஏற்கெனவே சண்டிவீரன் என்ற படத்தை இயக்கியுள்ள சற்குணம், மீண்டும் அதர்வாவுடன் இணைந்துள்ளார். லைகா நிறுவனத்தின் சார்பில் சுபாஷ்கரன் மற்றும் ஜிகேஎம் தமிழ்குமரன் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு ‘பட்டத்து அரசன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
நடிகர் அதர்வாவும், ராஜ் கிரணும் கிராமத்து தோற்றத்தில் இருப்பது போன்று உள்ளது. ஆகையால், இந்த படமும் வழக்கம்போல் சற்குணத்தின் கிராமத்து பின்னணி கொண்ட கதையாகதான் இருக்கும் எனத் தெரிகின்றது.
இந்த படத்தில் ராதிகா சரத்குமாரும் நடிக்கிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார். படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் ‘யு’ கிடைத்துள்ளது. இந்தப் படம் நவ.25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகுமென அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Let’s make some noise for the #PattathuArasan coming to screens near “U” on 25th NOV! @Atharvaamurali #Rajkiran @AshikaRanganath @realradikaa @SarkunamDir @GhibranOfficial #Loganathan @editor_raja @gkmtamilkumaran @LycaProductions #Subaskaran pic.twitter.com/uKIc6J33L2