செய்திகள்

நடிகர் கார்த்தியின் முகநூல் பக்கம் முடக்கம்

14th Nov 2022 01:00 PM

ADVERTISEMENT

தனது முகநூல் பக்கம் ஹேக் செய்யப்பட்டதாக நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார். 

கோலிவுட்டில் பிரபல நடிகராக வலம்வருபவர் நடிகர் கார்த்தி. அண்மையில் இவரது நடிப்பில் வெளியான விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் ஆகிய படங்கள் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தது.

தற்போது ராஜூ முருகன் இயக்கத்தில் 'ஜப்பான்' படத்தில் அவர் நடித்து வருகிறார். 

இந்தப் படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் இன்று மாலை வெளியாக உள்ளது. இந்த நிலையில் கார்த்தியின் முகநூல் பக்கம் ஹேக் செய்யப்பட்டதாக நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார். 

ADVERTISEMENT

இதையும் படிக்க- நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் வடிவேலு பாடிய ‘அப்பத்தா' பாடல் இன்று வெளியீடு

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், எனது முகநூல் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. நாங்கள் முகநூல் குழுவுடன் இணைந்து அதை மீட்டெடுக்க முயர்சித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கார்த்தியின் முகநூல் பக்கம் ஹேக் செய்யப்பட்ட சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT