செய்திகள்

'இந்தியன் 2' படத்தில் இணையும் பிரபல கிரிக்கெட் வீரரின் தந்தை!

1st Nov 2022 05:34 PM

ADVERTISEMENT

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துவந்த இந்தியன் 2 படம் விபத்து உள்ளிட்ட காரணங்களால் பாதியில் நின்றது.

ஜெயமோகன் எழுத்தில் லைகா தயாரிப்பில் அனிரூத் இசையில் ரவி வர்மா, ரத்னவேலு ஒளிப்பதிவில் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படம் உருவாகி வருகிறது. 

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘விக்ரம்’ மிகப்பெரிய வெற்றியைப் பெற்று ரூ.400 கோடி வசூலைத் தாண்டியதால் தற்போது ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் பணிகளை மீண்டும் துவங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். 

இந்தப் படத்திற்காக நடிகை காஜல் அகர்வால் தீவிரமாக வாள் சண்டை கற்றுக்கொண்ட விடியோ சமீபத்தில் வெளியானது. 

ADVERTISEMENT

தற்போது இந்தப் படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை யோகராஜ் சிங் இணைந்துள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “கேமிராவுக்கு பின்புறம் இருக்கும் அனைத்து நாயகர்களுக்கும் மிகுந்த மரியாதை செலுத்துகிறேன். என்னை மேலும் அழகாக காட்டியதற்காக ஒப்பனையாளருக்கு நன்றி. பஞ்சாபின் சிங்கம் இந்தியன் 2 படத்தில் ஜெலெண்ட் கமலுடன் இணைவதற்கு தயாராக உள்ளது” என தெரிவித்துள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT