செய்திகள்

’காந்தாரா’ ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

1st Nov 2022 12:01 PM

ADVERTISEMENT

 

காந்தாரா திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டியின் இயக்கத்தில் தொன்மக் கதையை மையமாகக் கொண்டு உருவான திரைப்படம் ‘காந்தாரா’. 1800-களில் குறுநில ராஜா ஒருவர் பழங்குடிகளுக்கு வனப்பகுதியை ஒட்டிய நிலத்தை தானமாக வழங்குகிறார். ஆனால், அவருடைய சந்ததியினர் தங்களின் பூர்விக நிலத்தை பழங்குடியினரிடமிருந்து பறிக்க முயற்சிக்கும் கதையே இப்படம்.

தொன்மங்களையும் அதிரடியான சண்டைக் காட்சிகளையும் இணைத்து நல்ல திரைப்படமாக ரிஷப் ஷெட்டி மாற்றியிருக்கிறார்.

ADVERTISEMENT

கன்னட  வரவேற்பை தொடர்ந்து தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இதையும் படிக்க: ’துணிவு’ தயாரிப்பாளருடன் நடிகர் அஜித்: வைரல் புகைப்படம்

ரூ.16 கோடியில் தயாரான இப்படம் கன்னடத்தில் மட்டும் ரூ.150 கோடி வசூலைப் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், காந்தாரா திரைப்படம் வருகிற நவ.4 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் தமிழ், ஹிந்தி, கன்னடம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT