செய்திகள்

உலகின் உயரமான கட்டிடத்தில் 'விக்ரம்' டிரைலர்

31st May 2022 06:04 PM

ADVERTISEMENT

உலகின் உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபாவில் ‘விக்ரம்’ படத்தின் டிரைலர் வெளியாக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் திரைப்படம் ஜூன் 3ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், சூர்யா ஆகியோர் நடித்துள்ளதால் ரசிகர்களிடையே படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில், படத்தின் வெளியீட்டு பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக இயங்கி வருகிறார்கள். 

இதைத் தொடர்ந்து, தற்போது உலகின் உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபாவில் ‘விக்ரம்’ படத்தின் டிரைலர் நாளை (ஜூன் 1) இரவு 8.10 மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழு தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT