செய்திகள்

இது லோகேஷ் கனகராஜின் கதை (விடியோ)

31st May 2022 07:30 PM

ADVERTISEMENT


விக்ரம் திரைப்படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கதை குறித்த விடியோவை படத் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், நரேன், காளிதாஸ் ஜெயராம், காயத்ரி உள்ளிட்டோர் நடித்துள்ள விக்ரம் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார்.

இதையும் படிக்கஉலகின் உயரமான கட்டிடத்தில் 'விக்ரம்' டிரைலர்

பெரிய நட்சத்திரங்கள் இருப்பதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஏற்கெனவே உச்சத்தில் இருந்தது. இதன்பிறகு வெளியான டிரெய்லர், பாடல்கள் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்தன.

ADVERTISEMENT

படம் ஜூன் 3-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை முன்பதிவு தொடங்கியது. படத் தயாரிப்பு நிறுவனமும் படத்தைத் தீவிரமாக விளம்பரப்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் 'எங்கள் இயக்குநரின் கதை' என்ற பெயரில் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட லோகேஷ் கனகராஜின் காட்சிகளைத் தொகுத்து விடியோவாக வெளியிட்டுள்ளது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்.

ADVERTISEMENT
ADVERTISEMENT