கேன்ஸ் திரைப்பட விழாவில் ஏராளமான கலைஞர்கள் பங்குப்பெற்றதை பார்திருக்கிறோம். ஆனால் குஜராத் சினிமாவைச் சேர்ந்த நடிகை கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்குபெறுவது இதுவே முதல் முறை.
கோமல் தாக்கர் குஜாராத் சினிமாவின் முக்கியமான நடிகை. இவர் குஜராத் மட்டுமின்றி பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். மேலும் இவர் தொலைக்காட்சித் தொடர்களிலும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது நடிப்பு மட்டுமில்லாமல் இவர் ஒரு சிறந்த அலங்கார நுணுக்கம் உடையவர். இவர் கேன்ஸ் திரைப்பட இறுதி விழாவில் சிவப்பு நிற மேலங்கி அணிந்து அனைவரது கவனைதையும் ஈர்த்தார்.
“கேன்ஸ் விழாவில் பங்கு பெற்றதை கூற வார்த்தைகள் இல்லை. அவ்வளவு மகிழ்ச்சியான அனுபவம். குஜராத் சினிமாவை சர்வதேச அரங்கிற்கு கொண்டுச் செல்லும் முயற்சியில் அடிக்கல் நாட்டியது போன்றது” என கோமல் தாக்கர் கூறினார்.